"  டைப்பாடியில் நடந்த இளைஞர்கள், இளம்பெண்கள் பயிற்சி முகாமில், மேடைக்கு ராமதாஸ் வந்தபோது, பாதிக்கும் மேற்பட்ட சேர்கள் காலியாக இருந்தன. ஆங்காங்கே பலர் நின்று கொண்டு இருந்தனர். 

இதைப் பார்த்து அப்செட்டான ராமதாஸ், "மேடையில் உட்கார்ந்து இருக்கும் நிர்வாகிகள் அனைவரும் மேடையிலிருந்து இறங்க வேண்டும். காலியாக உள்ள சேர்களில் மக்கள் வந்து உட்கார்ந்த பின் தான் மேடைக்கு வரவேண்டும்' என, கோபத்தோடு கூறினார்.ராமதாஸ், ஜி.கே.மணியை தவிர அனைவரும் மேடை விட்டு இறங்கினர்."




  ரவர வன்னியர்களுக்கு நன்றியே இல்லாமல் போய்விட்டது. வாய்க்கால் வரப்பிலும் கல்லிலும் முள்ளிலும் கிடந்து அவஸ்த்தைப் படுகிறார்களே என்று தைலாபுர மாளிகையை மார்பிள் போட்டு வைத்து அழகுபார்க்கச் சொன்ன தியாகத்தை நினைத்துப்பார்த்தார்களா?

   இவர்கள் பெற்றப்பிள்ளைகள் படித்து பட்டத்தாரி ஆகட்டுமே என்ற நல்லெண்ணத்தில் சரஸ்வதியம்மா பெயரில் ஊரில் வசூல் பண்ணிய பணத்தை எடுத்து மருத்துவக்கல்லூரி கட்டியதுதான் நினைத்தார்களா?

  வன்னியரின் உரிமைக்குரல் டில்லி வரைகேட்க வேண்டும் வன்னியசமூதாயம் தலைநிமிர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மத்திய அமைச்சராக அறுமை மகனை கொல்லைப்புர வழியாக ஆக்கியதையும் மறந்து விட்டார்கள்

  இப்படிப்பட்ட ஜனங்களுக்காக கலைஞர் காலில் விழுந்து ஜெயலலிதா காலைப்பிடித்து கெஞ்சிக் கூத்தாடி எம்.எல்.ஏ. சீட்டுக்களை வாங்கி சேவையாற்றி நாலுகாசு பார்த்து சுகமா வாழலாம் என்றால் திடீரென இவர்களுக்கு புத்தி கித்தி தெளிஞ்சி போயிட்டா என்ன செய்வது?